ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஆத்ம சக்தி இருக்கிறது

Quotes Up

Topic #108

Newly WriterNo.1
Leela Devi
Leela Devi
6/3/2020, 8:53 am
ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஆத்ம சக்தி இருக்கிறது - ஸ்ரீ ஆத்ம சித்தர் லட்சுமி அம்மா

ஸ்ரீ ஆத்ம சித்தர் லட்சுமி அம்மாவின் தியான மற்றும் போதனை நிகழ்ச்சி சமீபத்தில் சென்னை, சாலிகிராமத்தில் உள்ள சிகரம் ஹாலில் நடைபெற்றது. இதில் பக்தர்களுடன் பத்திரிகையாளர்களும் கலந்துக் கொண்டு ஆன்மீகத்தில் உள்ள சந்தேகங்கள் குறித்து கேட்டனர்.

ஆத்மா என்றால் என்ன?, கடவுளை எப்படி உணர்வது?, இறந்த முன்னோர்களை கடவுளாக வழிபடலாமா? உள்ளிட்ட பத்திரிகையாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த ஸ்ரீ ஆத்ம சித்தர் லட்சுமி அம்மா, ”ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஆத்ம சக்தி இருக்கிறது. இந்த சக்தியை சரியாக பயன்படுத்தினால் மனிதர்களுக்கு இருக்கும் பிரச்சினைகளை அவர்களாகவே சரி செய்துக் கொள்ள முடியும்” என்று கூறினார்.

மேலும், இயற்கையும் கடவுள் தான், என்றவர், மனிதர்களுக்குள் கடவுள் இருக்கிறார். அதை தங்களது ஆத்மா மூலம் உணரலாம், என்றார்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஏராளமான பக்தர்கள் ஸ்ரீ ஆத்ம சித்தர் லட்சுமி அம்மாவுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார்கள். பக்தர்களுக்கு லட்சுமி அம்மா அருளாசி வழங்கினார்.

நிகழ்ச்சியின் இறுதியில், ஸ்ரீ ஆத்ம சித்தர் லட்சுமி அம்மா அவரைக் காண வந்த பக்தர்களுக்கு ஆன்மாவைக் கொண்டு மனித வாழ்க்கையின் பிரச்னைகளை தீர்த்து வைப்பது குறித்து பிரசங்கம் செய்தார்.

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஆத்ம சக்தி இருக்கிறது. மனிதனுக்குள்ள தெய்வ சக்தியை வெளிக்கொணர செய்வது. இந்த ஆத்ம சக்தியில் விவேகானந்தரோ அல்லது பல சித்தர்க ளோ கூட இருக்கலாம். இந்த சக்தியை சரியாக பயன்படுத்தினால் மனிதர்களுக்கு இருக் கும் பிரச்சனைகளை அவர்களாகவே சரி செய்துக் கொள்ள முடியும். அதுமட்டுமில்லாம ல், நாட்டிற்கு தேவையான நன்மைகளையும் செய்ய முடியும்.

மேலும், ஆன்மா என்பது உயிருள்ள மனிதருக்குள் இருப்பது; ஆத்மா என்பது இறந்தவர்க ளை குறிப்பது என்றார். மூன்றாவதாக, தியானம் என்கிற தவமுறையில் ஆன்மாவை உ ணர்தல் குறித்து தியானம் ஒன்றைக் கற்றுக் கொடுத்தார். பின்பு, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களின் ஆன்மிக சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார்.

6/3/2020, 8:53 am#1
Quyền hạn của bạn
You cannot reply to topics in this forum
Banner 600x300
Đăng nhập

Chưa có tài khoản? Đăng ký ngay!